உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருச்சி - பெங்களூரு மீண்டும் விமான சேவை

திருச்சி - பெங்களூரு மீண்டும் விமான சேவை

பெங்களூரு: திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு, தினசரி விமான சேவையை, மீண்டும் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு, தினசரி நான்கு விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு குளிர் கால அட்டவணையின்படி, நிர்வாக காரணங்களுக்காக, அந்த சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் தினசரி சேவையை துவக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் திருச்சி - பெங்களூரு இடையே, மார்ச் 30ம் தேதி முதல், தினசரி சேவைகளை, இண்டிகோ நிறுவனம் துவக்குவதாக அறிவித்துள்ளது. காலை 7:50 மணி, மதியம் 3:10, மாலை 4:45 மணி இரவு 8:55 மணிக்கு, ஏ.டி.ஆர்., வகை விமானங்கள் பெங்களூருவுக்கு இயக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, விமான நிறுவன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி