உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உல்லாசத்திற்கு அழைத்ததால் வாலிபரை கொன்ற இருவர் கைது வாலிபர் கொலையில் பெண், காதலன் கைது உல்லாசத்திற்கு அழைத்ததால் கொன்றது அம்பலம்

உல்லாசத்திற்கு அழைத்ததால் வாலிபரை கொன்ற இருவர் கைது வாலிபர் கொலையில் பெண், காதலன் கைது உல்லாசத்திற்கு அழைத்ததால் கொன்றது அம்பலம்

சிக்கபல்லாபூர்: தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணும், காதலனும் கைது செய்யப்பட்டனர். உல்லாசத்திற்கு அழைத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமானது.சிக்கபல்லாபூர் டவுன் அம்பேத்கர் நகரில் வசித்தவர் ஸ்ரீகாந்த், 29. வெல்டிங் தொழில் செய்த இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். மறுநாள் காலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது.பெண் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.அந்த காட்சிகள் அடிப்படையில் பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரின் நரசிம்மமூர்த்தி, 32, அவரது காதலி ரங்கம்மா, 30, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.கடந்த 3ம் தேதி இரவு ஸ்ரீகாந்த், தன் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தார்; சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக குப்பை அள்ளும் தொழில் செய்யும் ரங்கம்மா வந்தார். அவரிடம் பேச்சு கொடுத்த ஸ்ரீகாந்த், 'பணம் தருகிறேன். என்னுடன் உல்லாசமாக இருக்க வா' என்று அழைத்துள்ளார்.கோபம் அடைந்த ரங்கம்மா, ஸ்ரீகாந்திடம் தகராறு செய்துள்ளார். தன் காதலன் நரசிம்மமூர்த்தியிடம் மொபைல் போனில் பேசி வரவழைத்து உள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து ஸ்ரீகாந்த்தின் மர்ம உறுப்பில் தாக்கி அவரை பிடித்து சாலையில் தள்ளினர். பின், கல்லை எடுத்து தலையில் போட்டுக் கொன்றுவிட்டு தப்பியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி