உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விபத்தில் இருவர் பலி

 விபத்தில் இருவர் பலி

மாலுார்: மாலுார் -- கோலார் சாலையில் உள்ள எஸ்.எப்.எஸ்., பள்ளி அருகே, ஒரு கன்டெய்னர் லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியாகினர். கோலாரை சேர்ந்த அயூப், 35, சையத் உசேன், 40, ஆகியோர் கோலாரில் இருந்து மாலுாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கன்டெய்னர் டிரைவர் தலைமறைவானார். கோலார் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை