உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆண்களுக்கு வாரத்திற்கு ரெண்டு புல் ; எம்.எல்.ஏ., சர்ச்சை கோரிக்கை

ஆண்களுக்கு வாரத்திற்கு ரெண்டு புல் ; எம்.எல்.ஏ., சர்ச்சை கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்குவதை போல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில் வழங்க வேண்டும் என்று கர்நாடகா சட்டசபையில் எம்.எல்.ஏ., ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் தாக்கல் செய்தது. இதில், ரூ.36,500 கோடியாக இருக்கும் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எம்.ஏ.,வும், சட்ட நிபுணருமான எம்.டி.கிருஷ்ணப்பா சட்டசபையில் பேசினார். அவர் கூறியதாவது; கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை மூன்று முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால், ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், வரியை மீண்டும் உயர்த்தினால், எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது. மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம். அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மதுபாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்?, இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு பதிலளித்த எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ்,'நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, இதனை செய்யுங்கள். மக்களை குடிக்க விடாமல் நாங்கள் தடுத்து வருகிறோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
மார் 20, 2025 03:41

இந்த ஐடியா நல்லா இருக்கே. எப்படியும் எல்லா ஆண்களும் குடிமகன்களென்று முத்திரை பாதிச்சாச்சு அரசியல் வட்டாரத்தில். இதை ரேஷன் கடையில் வைத்தே கொடுத்திடலாம். குடித்னத்தோட இப்ப குடிக்காரனோட குடிதான் ரொம்ப முக்கியமான பேச்சா இருக்கு . வெட்க கேடான நாட்டில்


Gundappa
மார் 20, 2025 06:49

Next CM of Karnataka?


Sivak
மார் 19, 2025 20:09

அதுல பார்த்தீங்கன்னா.. ஒரு ஆம்பளையாவது தனக்கு ஏன் மாதா மதம் பணம் கொடுப்பதில்லை என்று கேட்கவில்லை... ????? ஓ சி பயணம் பெண்களுக்கு மட்டும் ஏன் என்று ஒருத்தரும் கேட்கவில்லை .... இதைத்தான் வித்யாசமாக இந்த எம் எல் ஏ கவன ஈர்ப்புக்காக கேட்டுள்ளார் என நினைக்கிறேன் ..


Ramesh Sargam
மார் 19, 2025 20:01

எப்படியாப்பட்ட மோசமான எம் எல் ஏ ... இவரை உடனே அக்கட்சியினர் கட்சியிலிருந்து பதவி நீக்கவேண்டும்.


Anantharaman Srinivasan
மார் 19, 2025 18:45

வாரத்திற்கு இரண்டு பாட்டில் கொடுக்கச்சொன்ன MLA வை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களே பெருமை படுங்கள்..


अप्पावी
மார் 19, 2025 18:16

குடிகாரன் திருந்தவே மாட்டான். அங்கே அடைச்சா இங்கேருந்து கடத்துவாங்க. இங்கே தடுத்தா கள்ளச்சாராயம் காய்ச்சுவாங்க. குடிகாரனாப் பாத்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. ஆனால் அது நடக்காது.


Srinivasan Krishnamoorthi
மார் 19, 2025 17:20

ஆணுக்கு பெண் சரி சமம் என்பது பாட்டில் விஷயத்தில் கூட பொய் தானோ


Bhaskaran
மார் 19, 2025 17:09

தமிழ்நாட்டில் இம்முறை அமல் படுத்தப்பட்டால் மது பிரியர்களுக்கு கொண்டாட்டம்


ராமகிருஷ்ணன்
மார் 19, 2025 16:42

திமுக அரசை விட பெரிய அரசா கர்நாடக அரசு இருக்கு.


A Viswanathan
மார் 19, 2025 17:26

இதோட விட்டாரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை