உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இயற்கைக்கு மாறான உறவு வழக்கு; தேவகவுடா பேரன் சூரஜுக்கு சிக்கல்

 இயற்கைக்கு மாறான உறவு வழக்கு; தேவகவுடா பேரன் சூரஜுக்கு சிக்கல்

பெங்களூரு: ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா குற்றமற்றவர் என்ற அறிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா. ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் தன்னை மிரட்டி இயற்கைக்கு மாறான உறவு கொண்டார் என்று, கட்சி தொண்டர் 2024 ஜூன் 22 ம் தேதி ஹொளேநரசிபுரா போலீசில் புகார் அளித்தார். இவ்வழக்கை விசாரித்த சி.ஐ.டி., அதிகாரிகள், சூரஜ் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர். சி.ஐ.டி., சமர்ப்பித்த அறிக்கை திருப்தி இல்லை. மறுவிசாரணை நடத்துமாறு நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ