மேலும் செய்திகள்
தேர்தல் பிரசாரம் தீவிரம்
01-Apr-2026
பாகல்கோட்: ''பிரதமர் மோடி குறித்து பேசுவதற்கு காங்கிரசாருக்கு எந்த தகுதியும் இல்லை,'' என விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார். பாகல்கோட்டில் பா.ஜ., வேட்பாளர் வீரண்ணா சரந்திமத்தை ஆதரித்து, விஜயபுரா எம்.எல்.ஏ., எத்னால் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: பிரதமர் மோடி குறித்து பேச காங்கிரசாருக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல் தொடங்கி மாநிலத்தில் உள்ள காங்கிரசார், மோடியின் காலடி துாசிக்கு கூட சமமானவர்கள் கிடையாது. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முதலில் பஞ்சாப் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை பெற்றவர். அவரை பற்றி பேசுவதால் நேரம் தான் வீணாகும். பா.ஜ.,வில் என்னை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது என்னுடைய வழக்கம் கிடையாது. இருப்பினும், என்னை பற்றி சிலர் வேண்டுமென குறை கூறுகின்றனர். விரைவில் பல மாற்றங்கள் நிகழலாம். பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
01-Apr-2026