உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரேபிஸ் வைரஸ் தடுக்க நாய்களுக்கு தடுப்பூசி

ரேபிஸ் வைரஸ் தடுக்க நாய்களுக்கு தடுப்பூசி

பெங்களூரு,: ரேபிஸ் வைரசை தடுக்கும் வகையில் நாய்களுக்கு செலுத்தும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கர்நாடகாவில் தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் நோய் பரவல் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன.தெரு நாய்கள், மனிதனை கடிப்பதால் பரவும் ரேபிஸ் வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு ரேபிசால் 42 பேரும்; நடப்பாண்டில் ஏப்ரல் வரை 15 பேரும் இறந்து உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதை தீவிரமாக எடுத்து கொண்டு, 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸை ஒழிக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது. இதன்படி, ஹெப்பாலில் உள்ள கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், உலக சுகாதாரத்திற்கான விலங்கு அமைப்பு, காமன்வெல்த் கால்நடை மருத்துவ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, தெரு நாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர் ஸ்ரீகிருஷ்ணா இஸ்லுார் கூறியதாவது:நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இது வைரசை கட்டுப்படுத்தும். தடுப்பூசி செலுத்துவதற்காக நாய்களை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அவை சாப்பிடும் உணவுகளில் மருந்தை கலந்தாலே போதும்; வைரஸ் கட்டுப்படுத்தப்படும். இம்முறை எளிதானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை