மேலும் செய்திகள்
காதலர் தினத்துக்கு தடை இ.ம.க., வலியுறுத்தல்
13-Feb-2026
பெங்களூரு: காதலர் தினத்தையொட்டி பெங்களூரில் நேற்று ரோஜா பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, சாக்லேட் போன்ற வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். அந்த வகையில், காதலுக்கும் ரோஜா பூக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டது. ஒற்றை ரோஜாப்பூ அல்லது பூங்கொத்து வடிவில் கொடுத்து மகிழ்வர். இதனால், ரோஜாப் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. பெங்களூரு கே.ஆர்., மார்க்கெட் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில், நேற்று ரோஜா பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. வழக்கமாக, 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒற்றை ரோஜாப்பூ, நேற்று, 50 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. அதிகபட்சமாக, 100 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனையான, இருபது எண்ணிக்கையிலான ரோஜாப்பூ பூங்கொத்து, 800 முதல் 1,100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த விலையை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
13-Feb-2026