உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 4வது முறை நிரம்பிய வாணி விலாஸ் அணை

4வது முறை நிரம்பிய வாணி விலாஸ் அணை

சித்ரதுர்கா: கடந்த 118 ஆண்டுகளில், நான்காவது முறையாக வாணி விலாஸ் அணை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் உள்ள வாணி விலாஸ் அணை, வரலாற்று பிரசித்தி பெற்றது. சித்ரதுர்கா மாவட்டத்தின் உயிர் நாடியாகும். 1907ம் ஆண்டில் கட்டப்பட்ட வாணி விலாஸ் அணை, 30.42 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகும். 1933ல் முதன் முறையாக நிரம்பியது. அதன்பின் பல ஆண்டுகள் நிரம்பவில்லை. 2022ன் நவம்பரில் நிரம்பியது. நடப்பாண்டு ஜனவரி 11ல், மூன்றாவது முறையாக நிரம்பியது. ஆரம்பத்தில் நீர்ப்பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தியதால் அணையில் நீர் குறைந்தது. அதன்பின் மழை தீவிரமடைந்ததால், நீர் மட்டம் அதிகரித்தது. நேற்று முன் தினம் முழு கொள்ளளவை எட்டி, நான்காவது முறையாக நிரம்பியது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாக்கு, தென்னை, மாதுளை உட்பட பல்வேறு விளைச்சல்களை பயிரிடுகின்றனர். வாணி விலாஸ் அணை நிரம்பிதால் நீர்ப்பாசன திட்டங்களுக்கும் உதவியாக உள்ளது. நீர் நிரம்பி அற்புதமாக காட்சியளிக்கும் அணையை ரசிக்க, மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிகின்றனர். அதிகமான நீர் உள்ளதால், அணை பகுதியில் நீந்துவது, துணி துவைப்பது கூடாது என, போலீஸ் துறை எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி