உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாட்டாள் நாகராஜ் மீண்டும் கைது

 வாட்டாள் நாகராஜ் மீண்டும் கைது

மாண்டியா: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி, அணை முன்பு கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. சில கன்னட அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்று, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தண்ணீர் திறப்பதை கண்டித்தும், மேகதாதுவில் உடனே அணை கட்ட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. திடீரென அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை