உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ: கே.ஆர்.எஸ்.,சில் பாதுகாப்பு குறைபாடு?

தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ: கே.ஆர்.எஸ்.,சில் பாதுகாப்பு குறைபாடு?

பெங்களூரு: கே.ஆர்.எஸ்., அணையின் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று, மூன்று வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது, அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை உள்ளது.இந்த அணை தண்ணீர், தமிழகம் - கர்நாடகா விவசாயிகள் உயிர்நாடியாக உள்ளது. பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.இந்த அணையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் அணையை சுற்றி பார்க்க அனுமதி உண்டு. சில பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்குள் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் மட்டுமே செல்ல முடியும்.இந்நிலையில் கே.ஆர்.எஸ்., அணையின் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற மூன்று வாலிபர்கள், மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், அணையின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என்று கேள்வி எழுந்து உள்ளது.இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. வீடியோவில் இருக்கும் வாலிபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !