உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குப்பை லாரிகள் விரட்டி அடிப்பு கிராம மக்கள் அதிரடி போராட்டம்

 குப்பை லாரிகள் விரட்டி அடிப்பு கிராம மக்கள் அதிரடி போராட்டம்

நெலமங்களா: விவசாய நிலங்களில் குப்பை கொட்ட வந்த ஜி.பி.ஏ.,வுக்கு சொந்தமான லாரிகளை தடுத்தி நிறுத்தி கிராம மக்கள் அதிரடி காட்டினர். பெங்களூரு நெலமங்களா தாலுகா கெம்பொஹள்ளியில் உள்ள விவசாய நிலங்களில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் லாரிகள் மூலம் குப்பை கொட்டி வந்தனர். இதனால், அந்த கிராமத்தினர் எரிச்சல் அடைந்தனர். குப்பை கொட்டக்கூடாது என லாரி டிரைவர்களிடம் சத்தம் போட்டனர். இருப்பினும், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால், துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் அவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு குப்பை கொட்ட வந்த லாரிகளை கிராமத்தினர் வழிமறித்தனர். 'வந்த வழியில் திரும்பி போகவில்லை என்றால் லாரிகள் அடித்து உடைக்கப்படும்' என பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். இதனால், குப்பை கொட்ட முடியாமல் லாரிகளுடன் திரும்பி சென்றன. இது குறித்து, நேற்று அவர்கள் கூறியதாவது : பெங்களூரில் சேகரிக்கப்படும் கழிவுகள் எங்கள் கிராமத்தில் கொட்டப்படுகின்றன. இதை பல முறை கண்டித்தும் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்ததால், 15 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. லாரி டிரைவர்களிடம் குப்பை கொட்டுவதற்கு யார் அனுமதி அளித்தனர் என கேட்டதற்கு, மவுனம் காக்கின்றனர். குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கும் ஜி.பி.ஏ.,வே சட்டவிரோதமாக குப்பை கொட்டுகிறது. இவர்களுக்கு யார் அபராதம் விதிப்பர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் மாநகராட்சிக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ