விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் தன்னார்வலர்கள்
பீதர்: வன விலங்குகளுக்கு வனப்பகுதியில் தண்ணீர் வழங்கும் தன்னார்வலர் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.மாநிலத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. பீதர் மாவட்டத்தில் கடும் அனல் காற்று வீசுகிறது. இதனால், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி வனப்பகுதியில் வாழும் விலங்குகள், பறவைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.பீதரில் உள்ள சிடகுப்பா, சிட்டா, தேவாவானா, பெல்லுாரா வனப்பகுதிகளில் விலங்குகள், பறவைகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இவற்றுக்கு தண்ணீர் அளிக்கும் விதமாக, ஸ்வாபிமானி எனும் தன்னார்வலர் குழு காட்டில் உள்ள சிமென்ட் தொட்டிகளில் தண்ணீரை ஊற்றுகிறது.இந்த குழுவினர், தண்ணீர் கேன்களில் குடிநீரை இருசக்கர வாகனங்களில் எடுத்து வந்து தொட்டிகளில் ஊற்றுகின்றனர். இதனால், பல வன விலங்குகள், பறவைகள் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொள்கின்றன.இவர்களின் இச்செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், வனத்துறை ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.