உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு சென்ட்ரல் மத்திய மாநகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக 4,068 கணக்கெடுப்பாளர்கள்; 518 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்ய மறுத்தாலோ அல்லது அலட்சியம் காண்பித்தாலோ 1,000 ரூபாய் அபராதம்; அதிகபட்சம், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை