மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
2 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
3 minutes ago
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று கிருத கம்பளம் பூஜை
4 minutes ago
பெங்களூரு: பெங்களூரு தெற்கு மண்டலத்தில், 208 ஏக்கர் பரப்பரவில் உள்ள மடிவாளா ஏரியில், நீர் வாழ் களைகளை அகற்ற, அதிநவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் கூறியதாவது: பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள மடிவாளா ஏரியில், நீர் வாழ் களைகள் நிரம்பியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த அதிநவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை, 1.28 கோடி ரூபாயாகும். 'ருத்ரா ஆக்வா மாக்ஸ்' என்ற, நீர் வாழ் களைகளை அப்புறப்படுத்தும் இந்த இயந்திரத்தை ஜி.பி.ஏ., வாங்கியுள்ளது. இந்த இயந்திரத்தை ஒரே ஒரு முறை பயன்படுத்தினாலே, அதிகபட்சம் ஐந்து டன் அளவுக்கு களைகளை அகற்றலாம். லைவ் ஜி.பி.எஸ்., டிராக்கிங் வசதி, பாதுகாப்பு சாதனங்கள், கேமராக்கள் கொண்டுள்ள இயந்திரத்தை, கட்டுப்பாட்டு அறையில் இருந்தே மேற்பார்வையிடலாம். வரும் நாட்களில் மற்ற ஏரிகளிலும், இந்த இயந்திரத்தை பயன்படுத்தி களைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மடிவாளா ஏரி, 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு மைதானம், சாலை விளக்குகள் பொருத்துவது, கழிப்பறைகள் கட்டுவது, பாலம் அமைப்பது உட்பட பல பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன் ஏரியில் படகு சவாரி இருந்தது. தற்போது, அது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago