போலீசாருக்கு என்ன வேலை?
ராய்ச்சூர்: சாலையில் உள்ள பள்ளத்தை மூடும் போக்குவரத்து போலீசாரை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். ராய்ச்சூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதை மூடுமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், பல சாலைகள் பள்ளங்களாகவே காட்சி அளிக்கின்றன. அப்படி இருக்கையில், மாவட்டத்தின் பிரதான சாலையில் உள்ள பள்ளத்தை மூடும் பணியில் மாவட்ட போக்குவரத்து போலீசாரே ஈடுபட்டனர். இது வீடியோவாக இணையத்தில் வெளியாகி பலரிடமும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. அது போல, பெங்ளூரு சாலைகளின் உள்ள பள்ளங்களையும் போக்குவரத்து போலீசார் மூடினால் வசதியாக இருக்கும் என சிலர் கிண்டல் அடித்து வருகின்றனர்.