உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டில்லி பயணம் எப்போது? அமைச்சர் சதீஷ் சூசகம்

டில்லி பயணம் எப்போது? அமைச்சர் சதீஷ் சூசகம்

சிக்கோடி: ''தேவைப்படும்போது நிச்சயம் டில்லி செல்வேன்,'' என, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி மீது கண் வைத்து இருப்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. மாநில தலைவர் பதவியை எப்போது அடையலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தலைவர் பதவிக்காக புதுடில்லி சென்று, கட்சி மேலிடத்தை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து நேற்று சிக்கோடியில் அவர் கூறியதாவது: நான் இப்போதைக்கு டில்லி செல்லப் போவதில்லை. இங்கேயே இருந்து கட்சி பணிகளை செய்ய போகிறேன். தேவைப்படும்போது நிச்சயம் டில்லிக்கு செல்ல வேண்டி இருக்கும். மாநில தலைவர் பதவி குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. அமைச்சரவை விரிவாக்கம், துணை முதல்வர் சிவகுமார், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. பீஹார் பிரசாரத்தில் அடுத்த முதல்வர் சிவகுமார் என கூறப்பட்டது, அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. சிவகுமாரின் ரசிகர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். ஹெரோகோடியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில், மாணவர்கள் பாதிக்கப்பட்ட விஷயம் குறித்து விசாரிக்கப்படும். ராஜ்யோத்சவா தின கொண்டாட்டத்தின் போது எம்.இ.எஸ்., அமைப்பினர் நடத்திய பேரணி கண்டிக்கத்தக்கது. அந்த அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பீஹார் தேர்தலில் கட்சி மேலிடம், 'பிசி'யாக இருப்பதால், சதீஷை சந்திக்க நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் டில்லி பயணத்தை 'கேன்சல்' செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ