உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசியலில் இருந்து ஓய்வு எப்போது? கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு எப்போது? கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா அறிவிப்பு

துமகூரு: “முதல்வர் சித்தராமையா அரசியலில் இல்லாவிட்டால், நானும் அரசியலில் இருந்து விலகுவேன்,” என, மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா அறிவித்துள்ளார்.துமகூரின் மதுகிரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரசில் மேலிடம், சித்தராமையா, சிவகுமார் என்று மூன்று அதிகார மையங்கள் உள்ளன. இது என் தனிப்பட்ட கருத்து. முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்பதை கட்சி மேலிடம் தான் கூற வேண்டும்.சித்தராமையாவின் நட்பு வட்டத்தில் இருந்து ராஜண்ணா விலகியதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. நான் எப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். இன்று, நாளை, எப்போதும் நான் சித்தராமையா அணி தான். அவர் அரசியலில் இல்லாவிட்டால், நானும் அரசியலில் இருந்து விலகுவேன்.ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அரசியலில் புரட்சி ஏற்படும் என்று கூறினேன். புரட்சி என்றதும், காங்கிரசில் ஏதோ நடக்க போகிறது என்று நினைப்பது தவறு. மத்திய அரசிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.கர்நாடக பா.ஜ.,வில் புரட்சி உள்ளது. 75 வயதை தாண்டியவர்களுக்கு எந்த பதவியும் கிடையாது என்று, பா.ஜ.,வில் எழுதப்படாத விதி உள்ளது. இதனால் அந்த கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் அத்வானி, ராம் மனோகர் ஜோஷி ஒதுக்கி வைக்கப்பட்டனர். இப்போது அதே விதி, பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொருந்தும். இதுவும் ஒரு மாற்ற புரட்சி தான்.அரசியல் என்பது தேங்கி நிற்கும் நீர் இல்லை. ஓடும் ஆறு. சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் களம் மாறி கொண்டே இருக்கும்.காங்கிரஸ் தலைவர் மாற்றம் நடப்பது உறுதி. பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, அடுத்த காங்கிரஸ் தலைவர் ஆகலாம். துமகூரு மாவட்டத்தை பிரித்து திப்துார், மதுகிரியை தனி மாவட்டங்கள் உருவாக்கலாம் என்பது என் கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை