உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஞ்., தேர்தல் எப்போது? அமைச்சர் கண்ட்ரே தகவல்

பஞ்., தேர்தல் எப்போது? அமைச்சர் கண்ட்ரே தகவல்

பெங்களூரு: ‘‘கர்நாடகாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கும்,’’ என்று கிராம வளர்ச்சி துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில், 2022ல் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு உட்பட பல காரணங்களால் தற்போது வரை தேர்தல் நடக்கவில்லை. தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில், 1,101 மாவட்ட பஞ்சாயத்து, 3,580 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல், ஓட்டுச்சீட்டு முறையில் நடத்தப்படும். தேர்தலுக்கான தேதியை மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விரைவில் அறிவிக்கும். பல கிராம பஞ்சாயத்துகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. நகராட்சிகள் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வந்துள்ளன. இதனால், தொகுதிகள் எல்லையை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முந்தைய பா.ஜ., ஆட்சியிலேயே தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். தேர்தலை நடத்துவதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ