உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பா.ஜ.,வுக்கு ஏன் ஓட்டு? முதல்வர் சித்து கேள்வி

 பா.ஜ.,வுக்கு ஏன் ஓட்டு? முதல்வர் சித்து கேள்வி

பாகல்கோட்: ''மக்கள் வாங்கிய கடனை, பிரதமர் மோடி தள்ளுபடி செய்தாரா. பிறகு ஏன் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார். பாகல்கோட் தாலுகா சுதாகுந்தாரவில் காங்கிரஸ் வேட்பாளர் உமேஷை ஆதரித்து, முதல்வர் சித்தராமையா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: வாக்குறுதி திட்டங்கள் குறித்து பா.ஜ.,வினர் பொய் பிரசாரம் செய்தால் யாரும் நம்ப வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள், வாக்குறுதி திட்டங்கள் மூலம் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தனர். கிருஷ்ணா மேல் நதி திட்டம், அலமாட்டி அணை குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டால், இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து பணிகளும் நடத்தி முடிக்கப்படும். இவ்விஷயத்தில் மத்திய அரசு அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது. 2023 சட்டசபை தேர்தலில் மொத்தம் 165 வாக்குறுதிகளை கொடுத்தோம். இதில், 158 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்து உள்ளோம். வாக்குறுதிகளை நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு. பிரதமர் மோடி உங்கள் கடனை தள்ளுபடி செய்தாரா. பின், ஏன் பா.ஜ.,வுக்கு நாம் ஓட்டு போட வேண்டும். பா.ஜ.,வினருக்கு ஓட்டு கேட்கும் தகுதி கூட கிடையாது. எந்த முகத்தை வைத்துகொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை