உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உறவுக்கு மறுக்கும் கணவர்; ரூ.2 கோடி கேட்கும் மனைவி

உறவுக்கு மறுக்கும் கணவர்; ரூ.2 கோடி கேட்கும் மனைவி

கோவிந்தராஜ்நகர் : தாம்பத்தியத்திற்கு மறுப்பதாக கூறி, கணவரிடம் விவாகரத்தும், 2 கோடி ரூபாயும் கேட்கும் மனைவி, அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, கோவிந்தராஜ்நகரில் வசிப்பவர் பிரவீன், 30; தொழிலதிபர். இவருக்கும், சிக்கமகளூரின் தரிகெரேயின் சந்தனா, 27, என்பவருக்கும், கடந்த மே 5ம் தேதி தரிகெரேயில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று சந்தனாவின் அருகில் செல்லவே பிரவீன் தயக்கம் காட்டினார். அடுத்த இரு நாட்களும் அவர் இப்படியே செய்ததால், சந்தனாவுக்கு, பிரவீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடலுறவு கொள்ள கணவர் மறுப்பது பற்றி, குடும்பத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையில், பிரவீனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் மன அழுத்தத்தில் இருப்பதால், உடலுறவு கொள்ள சில மாதங்கள் ஆகலாம்; சில மாதங்கள் பொறுமையாக இருக்கும்படி சந்தனாவிடம், டாக்டர்கள் கூறினர். ஆனாலும் பிரவீன் திருநங்கை என, தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சந்தனா அவதுாறு பரப்பி உள்ளார். கணவருடன் சேர்ந்து வாழவும் மறுத்தார். இதையடுத்து சந்தனாவின் குடும்பத்தினர், பிரவீன், அவரது பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். விவாகரத்து கொடுக்கும்படியும், ஜீவனாம்சமாக 2 கோடி ரூபாய் வழங்கும்படியும் கேட்டுள்ளனர். இதற்கு பிரவீன் மறுத்தார். பின், பெற்றோர் வீட்டிற்கு சந்தனா சென்று விட்டார். சில தினங்களுக்கு முன் பிரவீன் வீட்டிற்குள் புகுந்த, சந்தனாவின் குடும்ப உறுப்பினர்கள், பிரவீனை தாக்கிவிட்டு தப்பினர். பிரவீன் பெயரில் உள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை, சந்தனா பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி மிரட்டினர். இதுகுறித்து பிரவீன் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, கோவிந்தராஜ்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை