உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நீதிமன்ற வளாகத்தில் மனைவிக்கு கத்திக்குத்து

நீதிமன்ற வளாகத்தில் மனைவிக்கு கத்திக்குத்து

தாவணகெரே: நீதிமன்ற வளாகத்தில், மனைவியை கணவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாவணகெரே நகரில் வசிப்பவர் பிரவீன் குமார், 30. இவரும், பவித்ரா, 25, என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்துக்கு பின், இவர்களிடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மனைவி, தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை, இருவரும் தாவணகெரேவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்தனர். இருவரிடமும் நேற்று மதியம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து இருவரும், நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோதும், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, தானும் கையை பிரவீன் அறுத்துக் கொண்டார். இதை கண்ட நீதிமன்ற ஊழியர்களும், போலீசாரும் உடனடியாக இருவரையும் தாவணகெரே அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிமன்ற வளாகத்திலேயே, இந்த சம்பவம் நடந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி