உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டச் பண்ண ரூ.5,000 தரணும்: கணவருக்கு மனைவி டார்ச்சர்

டச் பண்ண ரூ.5,000 தரணும்: கணவருக்கு மனைவி டார்ச்சர்

பெங்களூரு: தன்னை ஒருமுறை தொடுவதற்கு, 5,000 ரூபாய் தர வேண்டும் என மனைவி நிபந்தனை விதிப்பதாக, போலீசில் கணவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரின், வயாலிகாவல் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீகாந்த், 28. தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கும், பிந்துஸ்ரீ, 24, என்பவருக்கும் 2022 ஆகஸ்டில் திருமணம் நடந்தது.கணவருடன், பிந்துஸ்ரீ ஒரு நாளும் நல்ல முறையில் குடும்பம் நடத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. பணத்தாசை பிடித்தவர். ஒருமுறை தன்னை தொட விரும்பினால், 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கணவருக்கு நிபந்தனை விதித்தார். பலவந்தமாக தன்னை தொட முயற்சித்தால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.கணவர் சம்பாதித்த பணத்தை, ஊதாரித்தனமாக செலவழித்தார். மனைவியின் குடும்பத்தினரும், வீடு வாங்க அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என்றதால், ஸ்ரீகாந்தை மர்ம உறுப்பில் உதைத்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் சித்ரவதையால் மனம் நொந்த ஸ்ரீகாந்த், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது:

திருமணமான நாளில் இருந்தே, மனைவி என்னிடம் சரியாக நடந்து கொண்டது இல்லை. தன்னை தொடுவதற்கு கூட பணம் கேட்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில், மென் பொறியாளராக பணியாற்றினேன். ஒர்க் பிரம் ஹோமில் இருந்த போது, மனைவியின் தொந்தரவால் வேலையை இழந்தேன்.மீட்டிங் நடக்கும் போது, என்னிடம் தகராறு செய்வார். லேப்டாப் முன்பு வந்து நடனமாடுவார். இதனால் என் வேலை போனது. வீடு வாங்க பணம் கேட்டு இம்சிக்கின்றனர். பணம் கொடுக்காததால், என்னை தாக்கினர். 'பணம் கொடுக்கும் வரை, உன் பக்கத்தில் வரமாட்டேன். 60 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இப்போதே குழந்தை வேண்டும் என்றால், தத்து எடுத்து கொள்ளலாம்' என, மனைவி கூறுகிறார். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். ஆனால் விவாகரத்து கொடுக்க, 45 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்கிறார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.பிந்துஸ்ரீ கூறுகையில், ''என் கணவர், அவரது குடும்பத்தினர் தான் என்னை அடித்து துன்புறுத்தினர். வேலைக்காரி போன்று என்னை நடத்தினர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். சரியாக உணவு கொடுக்கவில்லை. என்னை கணவர் வீட்டில் ஒழுங்காக நடத்தாத போது, நான் ஏன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும். அந்த குழந்தையும் கஷ்டம் அனுபவிக்க வேண்டுமா,'' என்றார். இது குறித்து, போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Karthik
மார் 20, 2025 19:10

ஒரு நாளைக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் 20 ஆயிரம் னு சம்பாதிக்கிற திறமையான பொண்ண போயி கல்யாணம் கட்டிக்கிட்ட பொறியாளர், இப்ப காசு பணமும் கிடையாது நீ சம்பாதிக்கவும் கூடாது எல்லாம் ஓசி தான்னு சொன்னா பாவம் அந்த பொண்ணு என்னா பண்ணும் சார்?? கட்டுனவனை ஜெயில்ல போடுங்க போலீஸ்கார்..


kulandai kannan
மார் 20, 2025 13:08

Man and woman are not made for each other


M.Mdxb
மார் 20, 2025 13:01

அப்போ அவ அந்த தொழில் செய்பவரா இந்த பெண்ணோட அப்பா இப்படி தான் 5000 கொடுத்து இவளை பெத்தாரோ


Palanisamy T
மார் 20, 2025 11:55

பாவம் இவர். காலமெல்லாம் இப்படி நரக வேதனை அனுபவிப்பது இவரின் தலையெழுத்தா? ஒருவேளை இது விதியின் செயலாக கூடயிருக்காலாம் இவர் விவாகரத்து கோருவது நன்று. விதியால் மாற்றமுடியாததை நீதிமன்றங்களால் மாற்றமுடியும். எல்லாம் இவர் கையில்தானுள்ளத்து


naranam
மார் 20, 2025 11:36

ஒரு வேளை....


M. PALANIAPPAN, KERALA
மார் 20, 2025 11:28

பாவம் ஸ்ரீகாந்த், இப்படி ஒரு மனைவி அமைந்தது பூர்வ ஜென்ம பலன் உடனே மனைவியை விட்டு விலகி வேறு வாழ்க்கை அமைத்து கொள்ளுங்கள் கலி காலம், இப்படியும் மனைவிமார்கள் இந்தியாவில் இருப்பார்களா?


BSA MARKETING
மார் 20, 2025 10:25

பழக்கதோஷத்தில கேட்டுருக்கலாம்


தமிழன்
மார் 20, 2025 09:26

மனைவியை தொடுவதற்கு ₹5000 என்றால் அவள் மனைவி இல்லை


अप्पावी
மார் 20, 2025 09:17

அந்த ஆள்நல்லவன்.


Mediagoons
மார் 20, 2025 08:59

அதனால்தான் திருமணமே செய்துகொள்வதில்லை


angbu ganesh
மார் 20, 2025 09:47

உங்க அறிவு எனக்கு இல்லாம போச்சே


முக்கிய வீடியோ