மேலும் செய்திகள்
7 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
28-Aug-2025
பெங்களூரு: ஊழல் புகார் உட்பட பல்வேறு காரணங்களால், தசராவுக்கு பின், ஐ.பி.எஸ்., முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கடந்த ஜூலையில் 35 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அரசு இடமாற்றம் செய்தது. ஆனாலும், கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை. மாண்டியாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரமும் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. இவை தவிர, ஊழல் வழக்குகளில் சிக்கும் போலீசார், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் மாநில அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வது மற்றும் காவல் துறையில் உள்ள பிரச்னைகளை களைவது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சமீபத்தில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினர். அப்போது, சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஹிதேந்திராவை துாக்கி அடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு, தகவல் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர், சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பி.கே.சிங், நிர்வாக பிரிவு ஏ.டி.ஜி.பி., சுமேந்து முகர்ஜி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி செய்யும் ஐ.பி.எஸ்.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், ஏ.சி.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வரும் எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களை இடமாற்றம் செய்யும்போது, சில ஐ.ஜி.பி.,க்கள், மாவட்ட எஸ்.பி.,க்களையும் மாற்றவும் அரசு தயாராகி வருகிறதாக கூறப்படுகிறது. தற்போது மைசூரு தசரா பாதுகாப்புக்காக பெங்களூரு, மங்களூரு, துமகூரு, குடகு, பெலகாவி, ஹூப்பள்ளி மாவட்ட போலீசார் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பின், யார், யாரெல்லாம் இடமாற்றப்படுவர் என்பது தெரிய வரும்.
28-Aug-2025