உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரசவித்த பெண் மரணம் டாக்டர்கள் மீது புகார்

பிரசவித்த பெண் மரணம் டாக்டர்கள் மீது புகார்

கலபுரகி : பிரசவமான சில நிமிடங்களில் இளம் பெண் உயிரிழந்தார். மருத்துவ ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கலபுரகி நகரில் வசித்தவர் ஸ்ரீதேவி, 25. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இவரை குடும்பத்தினர், அரசு சார்ந்த ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது. ஆனால், பிரசவமான சிறிது நேரத்தில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்தார். 'மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல், நர்ஸ்களே பிரசவம் பார்த்தனர். குழந்தையின் முகத்தையே பார்க்காமல், தங்களின் மகள் உயிரிழக்க மருத்துவமனை ஊழியர்களே காரணம். பிரசவத்துக்கு பின், சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. 'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை