உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இளம்பெண்கள் மீது பாம்பை வீசி ஏட்டிடம் உதை வாங்கிய வாலிபர்

இளம்பெண்கள் மீது பாம்பை வீசி ஏட்டிடம் உதை வாங்கிய வாலிபர்

மாண்டியா: மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின், கோட்டேவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. ஊர்வலமாக ஏரிக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலைகளை நீரில் கரைக்கும் போது, நீரில் பாம்பு தென்பட்டது. இதை பார்த்த இளைஞர் ஒருவர், பாம்பை கையில் பிடித்து ஆட்டம் காட்டினார். அது மட்டுமின்றி, ஏரிக்கரையில் நின்று சிலை கரைப்பை பார்த்து கொண்டிருந்த இளம் பெண்களை நோக்கி வீசி எறிந்தார். திடீரென பாம்பு மேலே விழுந்ததால், இளம் பெண்கள் பயந்து அலறினர். மக்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு, குழப்பத்துக்கு காரணமான இளைஞரை கண்டித்தார். அவரது கன்னத்தில் பல முறை அறைந்து எச்சரித்து விரட்டினார். பாம்பும் எங்கோ ஓடிவிட்டது. அதன்பின் சிலை கரைப்பு தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !