உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

 மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

தார்வாட்: எலக்ட்ரிக் ஹீட்டரில் தண்ணீரை சுட வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில், இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தார்வாட் மாவட்டம் தேவரஹூப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நிவேதிதா, 24. இரண்டு குழந்தைகளுக்கு தாய். இவர் நேற்று குளிப்பதற்காக, பக்கெட்டில் வைக்கக்கூடிய சுருள் போன்ற வடிவமுடைய எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்தி தண்ணீரை சுட வைத்தார். அப்போது, ஏதோ ஒரு யோசனையில் நேரடியாக கொதிக்கும் தண்ணீரில் கையை விட்டுவிட்டார். அதிலிருந்து வந்த மின்சாரம் அவரது உடலில் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நிவேதிதா உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தார்வாட் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர். பக்கெட் ஹீட்டரை பயன்படுத்தும் போது கவனம் தேவை எனவும், குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை