உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., விதான் சவுதா முன் இளைஞர் தற்கொலை முயற்சி

பெங்., விதான் சவுதா முன் இளைஞர் தற்கொலை முயற்சி

பெங்களூரு : பெங்களூரு விதான் சவுதா முன், விஷம் குடித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பெங்களூரு, சிவாஜிநகர் அம்பேத்கர் வீதியில் உள்ள, கர்நாடக அரசின் அதிகார மையமான விதான் சவுதாவின் நுழைவுவாயில் பகுதிக்கு, நேற்று மாலை இளைஞர் ஒருவர் வந்தார்.சிறிய கவரில் மறைத்து வைத்திருந்த, பாட்டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை குடிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி வந்து, இளைஞர் கையில் இருந்த விஷ பாட்டிலை பறித்தனர்.அவரை விதான் சவுதா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் ஹாசன் சென்னராயப்பட்டணாவின் சஞ்சய், 27, என்பது தெரிந்தது.“சென்னராயப்பட்டணா போலீசாரிடம் இருந்து எனக்கு நீதி கிடைக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் தற்கொலைக்கு முயன்றேன்,” என, அவர் கூறினார். அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை