உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்க நகை திருடியதாக கூறி வாலிபர் அடித்து கொலை

தங்க நகை திருடியதாக கூறி வாலிபர் அடித்து கொலை

பெலகாவி:தங்க நகை திருடியதாக கூறி, ஹோட்டலில் பணிபுரிந்த வாலிபரை, உரிமையாளர் சரமாரியாக தாக்கினார். இதில் வாலிபர் உயிரிழந்தார். பெலகாவி மாவட்டத்தில் உள்ள மாணிக்வாடியை சேர்ந்தவர் வெங்கப்பா, 18. இவர், கானாபூரின் புறநகர் பகுதியில் உள்ள 'ஸ்வராஜ்' எனும் ஹோட்டலில் 'ரூம் பாயாக' பணிபுரிந்தார். கடந்த மாதம் 20ம் தேதி, ஹோட்டலில் இருந்து தங்க நகை திருடியதாக ஹோட்டல் உரிமையாளர் நாகேஷ் குன்டு பெடாரே மற்றும் அவரது சகோதரர்கள் குற்றஞ்சாட்டினார். இதனால் அவரை, கடந்த சில நாட்களாக ஹோட்டலில் அடைத்துவைத்துத் தாக்கினர். படுகாயமடைந்த வெங்கப்பா, பெலகாவியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். வெங்கப்பாவின் பெற்றோர், ஹோட்டல் மீது போலீசில் புகார் செய்ய முற்பட்டனர். இதையறிந்த ஹோட்டல் உரிமையாளர், வெங்கப்பாவின் பெற்றோரை மிரட்டி உள்ளார். அது மட்டுமின்றி அவர்களுக்கு 10,000 ரூபாய் கொடுத்தார். இதனால், அவர்கள் போலீசில் புகார் செய்யாமல் இருந்தனர். இதையறிந்த கிராம மக்கள், வாலிபரின் பெற்றோருக்கு தைரியம் கொடுத்தனர். இதனால், அவர்கள், கானாபூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்