மேலும் செய்திகள்
நீச்சல் குளத்தில் இளைஞர் பலி
25-Mar-2025
பெங்களூரு: மரத்தில் மோதியதில் பைக் ஓட்டி வந்த இளைஞர் உயிரிழந்தார்.பெங்களூரு, லக்கரேவின், சவுடேஸ்வரி நகரில் வசித்தவர் நிதின், 24. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது நண்பர் ஹிருதய், 24, பூ அலங்கார வேலை செய்கிறார்.நண்பர்கள் இருவரும், நேற்று காலை ராஜாஜி நகரின், கூலி நகர் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிதின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பின்னால் அமர்ந்திருந்த ஹிருதய் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.அதிவேகமாக பைக் ஓட்டி வந்ததே, விபத்துக்கு காரணம் என, போலீசார் தெரிவித்தனர். ராஜாஜி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Mar-2025