உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 10 பேரின் சம்பளம் ஒருவருக்கு தனியார் வங்கியின் தாராளம்

10 பேரின் சம்பளம் ஒருவருக்கு தனியார் வங்கியின் தாராளம்

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் முன்னணி 10 பொதுத் துறை வங்கி தலைவர்களின் மொத்த சம்பளம், ஆக்ஸிஸ் வங்கி தலைமை செயல் அதிகாரியின் சம்பளத்தில் பாதியை விட குறைவாகும். பொது மற்றும் தனியார் துறை வங்கி நிர்வாகிகளின் ஆண்டு சம்பளத்தில் உள்ள வேறுபாடுகளுக்கான முக்கிய காரணம், தனியார் வங்கிகள் வழங்கும் ஊக்குவிப்பு சலுகைகளே. தனியார் வங்கி தலைவருக்கான சம்பளம், பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் தனியார் வங்கி தலைவர்கள், இ.எஸ்.ஓ.பி., எனும் பணியாளர் பங்கு உரிமை திட்ட சலுகைகளின் கீழ், தங்கள் வங்கிகளில் பங்குகளை வைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின்படி, ஆக்ஸிஸ் வங்கி நிர்வாக இயக்குனருக்கு 2022 - 23ம் நிதியாண்டின் செயல்பாடுகளுக்காக, கடந்த நிதியாண்டில் வங்கியின் 3.13 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அவரது சம்பள கணக்கில் சேர்க்கப்படும். பொதுத் துறை வங்கி தலைவர்களுக்கு இவை போன்ற சலுகைகள் கிடையாது.பத்து பொதுத்துறை வங்கி தலைவர்களின் மொத்த சம்பளம், ஆக்ஸிஸ் வங்கி தலைமை செயல் அதிகாரியின் சம்பளத்தில் பாதியை விட குறைவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

chennai sivakumar
ஆக 01, 2024 07:07

ரிசல்ட் காட்டவில்லை என்றால் சீட்டு கிழிக்கபடும் தனியார் துறைகளில். அரசு அலுவலகங்களில் அது இருக்குதா??


மேலும் செய்திகள்



புதிய வீடியோ