உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்

வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்

மும்பை: டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில், கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை, விரைவில் இல்லாமல் போகலாம் என, ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், 'கரன்சி மற்றும் நிதி' என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது: வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றுவதை டிஜிட்டல் மயமாக்கல் பரவலாக்கி வருகிறது. மூலதனம் மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு இடையேயான இடைவெளியை தானியங்கி முறை அதிகரிப்பதால், குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம்; அதிக திறனுக்கு அதிக ஊதியம் என்ற வேலைவாய்ப்பு சந்தை உருவாகிறது. அதே சமயம், தொழில்நுட்பம், நடுத்தர பணிகளை காணாமல் போகச் செய்கிறது.  2010 - 2011ம் நிதியாண்டில், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், 2022-- - 23ம் நிதியாண்டில், இதே விகிதம் 74:26 என்ற விகிதமாக மாறி உள்ளது.  உலகளவில், வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.  இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் உடையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2023ல் நடைபெற்ற ஒட்டுமொத்த பணியமர்த்தலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள், 16.80 சதவீதம் பங்களிப்பை கொண்டு உள்ளது.  இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், 2026ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக வளர்ச்சியடையக் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R SRINIVASAN
ஆக 04, 2024 08:51

வறுமையைப்போக்க மாணவர்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் படித்து முடித்தவுடன் வேலை தேடி அலையவேண்டிய அவசியம் இருக்காது .சக்தி காந்த தாஸ் சொல்வதுபோல் முதலில் டிஜிட்டல் துறை மேலே வருவது போல் தோன்றினாலும் அங்கும் வேலையில்லா திண்டாட்டம் உருவாகும். காரணம் டெக்னாலஜி முன்னேற முன்னேற புது புது வழிகள் உருவாகும் .ஆகையால் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதையும் ஆடம்பர செலவுகளையும் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தினால் அவர்கள் குடும்பமும் பொருளாதார ரீதியாக முன்னேறும்.


v good
ஆக 04, 2024 00:22

ALL BANKS & LIC TO A1 & A2 SHORTLY.. PROCESS DONE 3 YRS. AGO


Rajarajan
ஆக 03, 2024 11:07

அரசு வங்கிகளில் அப்படி என்னதான் பெரும்பாலும் செய்கிறார்கள் ?? நாம் எழுதிக்கொடுத்த சலான், அதை அப்படியே பார்த்து கணினியில் டைப் செய்கிறார்கள். அவ்வளவுதானே. மற்றதை எல்லாம் கணினியே வரவு செலவில் வைக்கிறது. தனியாக ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மேலும், மின்தடை ஏற்பட்டால், அந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மேலும், தற்போது மெஷினிலியே பணத்தை செலுத்தி ரசீது பெறுகிறோம். சாதாரண ஐம்பது ரூபாய் கால்குலேட்டர் செய்யும் வேலைக்கு எதற்கு இவ்வளவு பேர்கள்? இவ்வளவு ஆயிரத்தில் சம்பளம், பஞ்சபடிகள், போனஸ் மற்றும் சலுகைகள்?? தவிர ஓய்வூதியம் வேறு. அதிலும் பஞ்சபடி. இதில் வாரம் இருமுறை விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, சிறப்பு விடுமுறைகள் வேறு தனி. இதைத்தவிர, இன்னும் கூடுதல் சம்பளம் / போனஸ் / சலுகை மற்றும் விடுமுறைகள் வேண்டும் என்ற வேலை நிறுத்தங்கள் வேறு. தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், தனியார் நிறுவனங்கள் மேற்சொன்ன எதுவும் அளவுக்கு அதிகமாக இல்லாமல், திறன்பட தங்கள் நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் போது, எந்த அரசும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அனாவசியமாக மேலும் மேலும் இதன்மூலம் வீணடிக்க வேண்டுமா என்ன?? ஓ புரிகிறது. தனியார் ஊழியர்கள் தங்கள் வாயை வயிற்றை கட்ட தயாராக இருக்கையில், அரசு ஜமாய்க்க வேண்டியது தானே. இதில் அந்த அரசு, இந்த அரசு, எந்த அரசாக இருந்தால் என்ன? இக்கரைக்கு அக்கறை பச்சை தானே. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்று, திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல யார் ஒருவர் இந்தியாவுக்கு ஆள்வதற்கு கிடைக்கிறாரோ, அப்போது தான் இந்தியா அடுத்த கட்டத்துக்கு வேகமாக முன்னேறும். அந்த பொன்நாள் எந்நாளோ?? இறைவா, தனியார் ஊழியரை கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வரி விதிப்பிலிருந்து காப்பாற்று. உன்னையே சரணடைந்தோம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 02, 2024 09:38

இதில் தவறு எதும் இருப்பதாக தெரியவில்லை. நிதி நிர்வாகத்தில் கணினி மயமாக்கல் தவறுகள் குறையவும், நிதி நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும் திறமை கொண்டவர்களே வேலை பெறவும் வழி செய்யும். ஏனெனில் இது ஒரு பொதுமக்கள் சேவைத்துறை. இங்கு குறையும் வேலைவாய்ப்புகளை உற்பத்தி துறைக்கு மடைமாற்ற வேண்டும். உற்பத்தி துறையும், ஏற்றுமதியும் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுக வழி ஏற்படுத்தும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்துகொண்டு மனிதவள தேவை அதிகம் உள்ள உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும்.


மு. செந்தமிழன்
ஆக 02, 2024 07:27

இம்மாதிரியான செயற்கை தொழில்நுட்பங்களை அனைத்து துறைகளிலும் புகுத்தி வேலைவாய்ப்பின்மையை அரசும், பெருநிறுவனங்களும் தொடர்ந்து செய்தால் நாட்டில் கொலை கொள்ளை போன்ற சமூக சீர்கேடுகள் சர்வ சாதாரணமாக நடக்கும், கத்தி போய் வாள் வந்த கதை ஆகிவிடும், ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் இது ஒரு பெரிய தலைவலியை நிச்சயம் உண்டு பண்ணும்


மேலும் செய்திகள்