உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / எஸ்.பி.ஐ., வட்டி மீண்டும் உயர்வு

எஸ்.பி.ஐ., வட்டி மீண்டும் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.இதையடுத்து, வீடு, வாகனம் உள்ளிட்ட நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எஸ்.பி.ஐ., கடந்த ஜூன் மாதம் இதே போன்று வட்டி விகிதத்தை, 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.'ரெப்போ' வட்டி விகிதத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை, வங்கிகள் உடனே அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. வங்கிகள் எம்.சி.எல்.ஆர்., விகிதத்துக்கு குறைவாக வட்டி வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.பொதுவாக, ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள், லாபம் என பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை மாற்றி அமைக்கின்றன.இதன்படி, ஓராண்டுக் கான வட்டி விகிதம் தற்போதுள்ள 8.75 சதவீதத்தில் இருந்து, 8.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

காலம்- முந்தைய வட்டி விகிதம்- மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம்

ஒரு நாள் -8.10- 8.10 ஒரு மாதம்- 8.30- 8.35மூன்று மாதங்கள்- 8.30 - 8.40ஆறு மாதங்கள்- 8.65- 8.75ஓர் ஆண்டு- 8.75- 8.85இரண்டு ஆண்டுகள்- 8.85 -8.95மூன்று ஆண்டுகள்- 8.95 - 9.00


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RANJITH
ஜூலை 17, 2024 07:43

கடனை கட்டாதவர்களுக்கு ஆயிரம் கோடி கடனை கொடுத்துவிட்டு மக்கள் வயிற்றில் அடித்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம்.


Barakat Ali
ஜூலை 17, 2024 08:13

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை என்று ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சரும் சொல்வார்கள்.. உண்மையான காரணம் அதிக ஊழியர்கள், முறைகேடுகள், வாராக்கடன்கள் இவற்றால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்துவதுதான் ....


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை