| ADDED : ஜூன் 30, 2024 01:25 AM
அமெரிக்கா:குறைந்த கார்பன் உமிழ்வுகள் இந்தியாவின் முயற்சியை ஆதரிக்கும் விதமாக, இரண்டாவது கட்டமாக, கிட்டத்தட்ட 12,450 கோடி ரூபாய் நிதியளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு 12,450 கோடி ரூபாய் நிதி அளிக்க, உலக வங்கி கடந்தாண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. இந்த நிதியுதவி ஆண்டுக்கு, 50 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏலங்களை துவங்குவதற்கு உதவியது. மேலும், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பரிமாற்ற கட்டணங்களை தள்ளுபடி செய்தல், தேசிய கார்பன் கிரெடிட் சந்தைக்கான கட்டமைப்பை உருவாக்குதல் உள்ளிட்டவற்றுக்கும் உதவியது.தற்போது இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, இந்தியாவிற்கு மேலும் 12,450 கோடி ரூபாய் நிதி அளிக்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது, 4.50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதற்கும், ஆண்டுக்கு 500 லட்சம் டன் கார்பன் உமிழ்வுகளை குறைப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.