உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பிரதமரின் ஜன் தன் வங்கி திட்டம் கைவிடப்பட்ட 1.10 கோடி கணக்குகள்

பிரதமரின் ஜன் தன் வங்கி திட்டம் கைவிடப்பட்ட 1.10 கோடி கணக்குகள்

புதுடில்லி:'பிரதமரின் ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட ஐந்தில் ஒரு வங்கிக் கணக்கு, டிசம்பர் 2024க்குள் கைவிடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 1.10 கோடி கணக்குகள் செயல்பாடற்று இருக்கும் நிலையில், இது மொத்த ஜன் தன் கணக்குகளில் 21 சதவீதம்.ஜன் தன் கணக்குகளின் செயல்பாடு குறித்து, ரிசர்வ் வங்கியின் சரிபார்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதன் வாயிலாக, கணக்குகளை மீண்டும் செயல்பட செய்வதற்கு முயற்சிப்பதாக, நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனினும், இதுதான் நிலைமை என்று டில்லியில் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.கணக்கு வைத்திருப்பவர் தொடர்ந்து 24 மாதங்களுக்கு அந்தக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாதபோது, வங்கிக் கணக்கு செயலற்றதாகக் கருதப்படுகிறது. செயலற்ற ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2024ல் 19 சதவீதமாக இருந்தது, இது 2024 டிசம்பரில் 21 சதவீதமாக அதிகரித்தது.பிரதமர் நரேந்திர மோடி ஜன் தன் யோஜனா திட்டத்தை ஆகஸ்ட் 28, 2014 அன்று துவக்கி வைத்தார். நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். மானிய திட்டங்களின் தொகை நேரடியாக இந்தக் கணக்கில் அரசால் செலுத்தப்படுகிறது. பல கணக்கு கள் வழக்கமான சேமிப்புக் கணக்குகளாக மாற்றப்பட்டதும் செயல்படாத கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்கிறார்கள், நிதித்துறை நிபுணர்கள்.ஜன் தன் கணக்கின் கீழ் கிடைக்கும் பலன்கள் பற்றி பல பயனாளிகள் அறியவில்லை. பலர் பணம் டிபாசிட் செய்யப்பட்டவுடன், மொத்த பணத்தையும் உடனடியாக திரும்பப் பெற்றதாலும், பின்னர் பரிவர்த்தனை செய்யாமல் இருந்ததாலும் கணக்குகள் செயலிழந்தன. சுபாஷ் சந்திர கார்க் இந்திய முன்னாள் நிதித்துறை செயலர்செயலற்ற கணக்குகள்19%2024 மார்ச்21%2024 டிசம்பர்ரூ.2.31 லட்சம் கோடிமொத்த வைப்பு தொகை(ஆக., 2024 நிலவரம்)ரூ.4,352 சராசரி வைப்பு தொகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaran
பிப் 05, 2025 20:38

then why did nirmala unncessarily scold sbi bank former chairman in public?.. if the account is not operated, it will be closed auto by the server.. Cant FM understand this simple logic?


karthik
பிப் 07, 2025 09:16

this jan dhan aacounts are different from normal saving account, so they should be considered before the auto server to close the account. because even if there is no Balance in that account the government subsidiary will be credited in future also. so with some other option those accounts should keep alive. ok??? 200 RS BRAIN


முக்கிய வீடியோ