வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்கள் கையில் பணமில்லை. எல்லாத்துக்கும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது என்று தான் அர்த்தம்
பொருளாதாரம் 11% வளந்துருக்குன்னு அளந்து விடுவாங்க
புதுடில்லி : ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவை அதிகரிப்பின் காரணமாக, கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த 14 நாட்களில், வங்கி கடன் வழங்கல், 11.38 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் கடந்த ஜனவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் வங்கி கடன் வழங்கல் 11.41 சதவீதம் அதிகரித்திருந்தது. அதன் பின், இதுவே கடந்த எட்டு மாதங்களில் அதிகபட்ச வளர்ச்சியாகும். முந்தைய இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் கடன் மதிப்பு கடந்த அக்டோபர் 4ம் தேதி, 1.92 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனிடையே, 'கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகும் என தெரிவிக்கப்பட்டதால், கடந்த மாதத்தின் முற்பகுதியில் மக்கள் செலவு செய்வதை தவிர்த்து, காத்திருந்தனர். 'இதனால் கடந்த 22ம் தேதிக்கு பின் தேவை அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகைகள் காரணமாக, மக்களின் செலவு செய்யும் திறன் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என, பேங்க் ஆப் பரோடா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கையில் பணமில்லை. எல்லாத்துக்கும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது என்று தான் அர்த்தம்
பொருளாதாரம் 11% வளந்துருக்குன்னு அளந்து விடுவாங்க