உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / சீன மத்திய வங்கி ரூ.40,000 கோடி இந்திய நிறுவனங்களில் முதலீடு

சீன மத்திய வங்கி ரூ.40,000 கோடி இந்திய நிறுவனங்களில் முதலீடு

புதுடில்லி : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக, இரு தரப்பு உறவில் சுமூக சூழல் நிலவாமல் இருந்த போதும், சீனாவின் மத்திய வங்கி, பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களில், கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்கு முன்னதாக, நம் நாட்டில் இயங்கும் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு மேற்கொண்டுள்ள அனைத்து அன்னிய முதலீட்டாளர்கள் குறித்தும், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.நடப்பாண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 35 இந்திய நிறுவனங்களில், சீன மத்திய வங்கி கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளது. அதிகபட்சமாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 6,139 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக எச்.டி.எப்.சி., இன்போசிஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது. பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனத்திலும் 1,414 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் முதலீடு (ரூ. கோடியில்) நிறுவனத்தில் பங்கு (%)

ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 6,139 0.67எச்.டி.எப்.சி., பேங்க் 5,344 0.39இன்போசிஸ் 5,303 0.67டி.சி.எஸ்., 3,619 0.24கோட்டக் மஹிந்திரா பேங்க் 1,604 0.46பஜாஜ் பைனான்ஸ் 1,602 0.38ஹிந்துஸ்தான் யுனிலிவர் 1,530 0.28பவர் கிரிட் 1,414 0.49மாருதி சுசூகி 1,198 0.35டாடா மோட்டார்ஸ் 1,171 0.43


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை