வாசகர்கள் கருத்துகள் ( 1 )
They Charge 18% GST for Idli dosa batter too. But, ready to eat rotis, chapatis and parathas are ged with 0% GST. They want south money to develop north.
சென்னை : இட்லி, தோசை மாவு அரைக்க உதவும், வெட் கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு மத்திய அரசுக்கு, கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிரைண்டர் உற்பத்தியில் கோவை முன்னணியில் உள்ளது. அங்கு, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது, கிரைண்டருக்கு ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது. இதை குறைக்குமாறு கிரைண்டர் உற்பத்தியாளர்கள், மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்ப, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி., வரி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறுசீரமைப்பிலும், 18 சதவீதமாக வரி தொடர்கிறது. இதுகுறித்து, கோவை மாவட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் சாஸ்தா ராஜா கூறியதாவது: கடந்த, 2017ல் ஜி.எஸ்.டி., அமல்படுத்திய போது, வெட் கிரைண்டருக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதை குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 12 சதவீதம், 5 சவீதம் என, குறைக்கப்பட்டு மீண்டும், 2021ல், 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதை, 5 சதவீதமாக குறைக்கவோ, முழு வரி விலக்கு அளிக்கவோ முன்வருமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் அறிவிப்பு இல்லை. விலை அதிகம் என் ப தால், பலர் கிரைண்டர் வாங்குவதில்லை. மேலும் , இட்லி, தோசை மாவு அரைத்து விற்கப்படுவதால், கிரைண்டர் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, கிரைண்டருக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும் அல்லது 5 சதவீதம் என வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
They Charge 18% GST for Idli dosa batter too. But, ready to eat rotis, chapatis and parathas are ged with 0% GST. They want south money to develop north.