மேலும் செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி
07-Nov-2024
“அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் உத்தரவிட்டாலும், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என, பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். பணக்கொள்கை முடிவுகளை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், பதவி விலகுவீர்களா?” என கேட்டபோது, இவ்வாறு பதிலளித்தார். மத்திய வங்கியின் கவர்னர்களை பதவி நீக்க, அதிபருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 2017ம் ஆண்டு, டிரம்ப் அதிபராக இருந்தபோது, பெடரல் ரிசர்வ் தலைவராக பவல் நியமிக்கப்பட்டார். கடந்த, 2019ல் கடன் வட்டியை குறைக்கும் விஷயத்தில் டிரம்ப், பவல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், பவல் தன் எதிரி என்றார் டிரம்ப். பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கடன் வட்டி நிர்ணயத்தில், அதிபர் குறைந்தபட்சம் தன் கருத்தை பெடரல் ரிசர்விடம் தெரிவிக்கலாம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். எனினும், 2026ல் பதவிக்காலம் முடியும் வரை, பெடரல் ரிசர்வ் தலைவராக பவல் நீடிக்கவே டிரம்ப் விரும்புவதாக, அவரது ஆலோசகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
07-Nov-2024