சரியும் வெளிநாட்டு வங்கிகள்
மும்பை;ஒரு காலத்தில் இந்தியாவின் கிரெடிட் கார்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டு வங்கிகள், தற்போது உள்நாட்டு வங்கிகளின் கடும் போட்டியால் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.இது குறித்து ரிசர்வ் வங்கியின் தரவுகள் மற்றும் 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவன ஆய்வில் தெரிவித்ததாவது:இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு வங்கிகளால் வழங்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்த கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை, கடந்த 2025ம் ஆண்டில் முந்தைய 2024 உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிவை கண்டுள்ளன.இந்தாண்டு ஜனவரியில், வெளிநாட்டு வங்கிகளின் சந்தை பங்களிப்பு கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கு கீழாக குறைந்துள்ளது. உள்நாட்டு வங்கிகள் இத்துறையில் வெகுவேகமாக விரிவடைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.