மைசூரில் ஹிட்டாச்சி நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீடு
புதுடில்லி; ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனம், மைசூரில் உள்ள, உயர்தர டிரான்ஸ்பார்மர் இன்சுலேஷன் பொருட்களை உற்பத்தி செய்யும் தங்கள் நிறுவனத்தை விரிவாக்க, 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மின்சார டிரான்ஸ்பார்மர்களில் இன்சுலேஷன் பொருட்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மின்சாரத்தை சீராக விநியோகிக்கவும், ஷார்ட் சர்க்யூட்டை தடுக்கவும் இவை தரமாக இருப்பது அவசியம். இந்த சூழலில் இன்சுலேஷன் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக ஹிட்டாச்சி நிறுவனம் கடந்த 2024-ம் ஆண்டில் அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக இந்த 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.