உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்

ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்

கொல்கட்டா: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை உயர்த்திய விவகாரத்தில் தலையிடக் கோரி, மத்திய நிதி அமைச்சகத்துக்கு சமூக அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இந்த மாதம் முதல், புதிதாக கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை, ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. நகர்ப்புறங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும்; சிறிய நகரங்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும்; கிராமப்புறங்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள ஒரு அமைப்பு, வங்கியின் இந்த நடவடிக்கை, அனைவருக்கும் வங்கி சேவை வழங்குவது என்ற அரசின் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. வங்கிகளின் சுதந்திரம் இதற்கிடையே, தங்களது விருப்பத்துக்கேற்ப குறைந்தபட்ச சராசரி இருப்பை நிர்ணயித்துக் கொள்ள வங்கிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KR india
ஆக 12, 2025 11:05

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள், பொதுமக்கள் பக்கம் நின்று பேச வேண்டுமே தவிர, தனியார் வங்கியின் செய்தி தொடர்பாளர் போல் பேசுவது ஏற்புடையதா ? குறைந்தபட்ச சராசரி இருப்பை நிர்ணயித்துக் கொள்ள, வங்கிகளுக்கு சுதந்திரம் இருப்பினும், அதில், சற்றாவது, நியாய தர்மம் வேண்டாமா? ஏற்கனவே, இருந்த குறைந்தபட்ச சராசரி இருப்பு விகிதமே சற்று அதிகம் தான். இப்போது அறிவித்துள்ள, சராசரி இருப்பு விகிதம் மிக மிக அதிகம். வேண்டுமானால், இந்த தொகையை அந்த வங்கியின் PREMIUM SERVICE பிரீமியம் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு வேண்டுமானால் வைத்து கொள்ளட்டும். சிறிய நகரில் குடியிருந்தால், அவர் லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் "குறைவான சராசரி இருப்பு போதும் என்றும், பெரிய நகரங்களில் வசிப்பவர், குறைவாக சம்பாதிப்பவராக இருந்தாலும், "அதிகமான தொகை சராசரி இருப்பு வேண்டும்" என்று அளவுகோல் வைப்பது சரியல்ல. பொது வாடிக்கையாளருக்கு, அனைத்து தனியார் வங்கிகளிலும், சிறிய நகரமோ, பெரிய நகரமோ, மாத இருப்பு அதிகபட்சமாக Rs.5,000 ஐந்தாயிரம் தாண்டக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள் தெரிவித்து, அதுற்குண்டான RBI Order அறிவிக்கையை வெளியிட வேண்டும். அனைவருக்கும் வங்கி சேவை என்னும் மத்திய அரசின் "தாரக மந்திரம்" மெய்ப்பட வேண்டும். குறைந்தபட்ச சராசரி இருப்பு பராமரிக்க வேண்டும் என்ற பெயரில், அளவுக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து, வங்கி சேவை, பொதுமக்களுக்கு மறுக்கப்படக் கூடாது . நன்றி


புதிய வீடியோ