இண்டஸ்இண்ட் வங்கிக்கு புதிய நிர்வாகிகள் குழு
'இண்டஸ்இண்ட்' வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட, இடைக்கால ஏற்பாடாக புதிய நிர்வாகிகள் குழுவை, அவ்வங்கியின் இயக்குநர்கள் குழு நியமித்து உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்ட இண்டஸ்இண்ட் வங்கியின் கணக்குகளில், 1,960 கோடி ரூபாய் அளவுக்கு முரண்பாடுகள் இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதனால், சந்தையில் வங்கியின் பங்குகள் அதிக சரிவை கண்டன. இந்நிலையில், பிரச்னைக்கு பொறுப்பேற்று, வங்கியின் தலைமை செயல் அதிகாரி சுமந்த் காத்பாலியா நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நேற்று நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவுக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்து உள்ளது. புதிய சி.இ.ஓ., நியமிக்கப்படும் வரை இக்குழு பணிகளை கவனிக்கும்.