உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கி கணக்கு துவக்க எளிதாகிறது கே.ஒய்.சி.,

வங்கி கணக்கு துவக்க எளிதாகிறது கே.ஒய்.சி.,

புதுடில்லி:வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் கே.ஒய்.சி., நடைமுறையை, ரிசர்வ் வங்கி எளிமையாக்கியுள்ளது. இதற்காக கே.ஒய்.சி., விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து வங்கிக் கணக்கு துவங்கும் நடைமுறை, மேலும் எளிதாகியுள்ளது. முதல் முறை வங்கி பயனாளர்கள் மற்றும் அரசின் நிதியுதவி பெறும் வாடிக்கையாளர்களை வங்கி கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கும் விதமாக, இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி மூன்று விதமான நடைமுறைகளைப் பின்பற்றி, வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கலாம்.

1. நேரடி சரிபார்ப்பு

வாடிக்கையாளர் நேரடியாக வந்ததும், ஆதார் பயோமெட்ரிக் அடிப்படையிலான கே.ஒய்.சி., வாயிலாக கணக்கு துவங்கலாம்ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கும், தற்போதுள்ள முகவரிக்கும் வேறுபாடு இருந்தால், வாடிக்கையாளரின் சுய சான்று போதுமானது.நேரடியாக வந்த பின், டிஜிட்டல் கே.ஒய்.சி., முறையிலும் கணக்கு துவங்கலாம்.

2. மறைமுக சரிபார்ப்பு

வாடிக்கையாளர்கள் நேரடியாக வரவில்லை என்றால், ஆதார் எண் சரிபார்க்க ஓ.டி.பி., அனுப்பி, கே.ஒய்.சி., நடைமுறையை பின்பற்றலாம். எனினும் இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.டிஜிலாக்கர் தளத்தில் உள்ள ஆவணங்கள், மின்னணு ஆவணங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட பிற ஆவணங்களை சரிபார்ப்புக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு துவங்கப்படும் வங்கிக் கணக்குகளுக்கு சொந்தமான வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள், ஓர் ஆண்டுக்குள் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்.

3. வீடியோ சரிபார்ப்பு

வாடிக்கையாளரின் ஒப்புதலோடு, பாதுகாப்பான சூழலில், வீடியோ கால் முறையில், வங்கி அதிகாரி வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.கணக்கு துவங்கவும், கே.ஒய்.சி., தகவல்களை புதுப்பிக்கவும், இந்த நடைமுறையை பின்பற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஜூன் 13, 2025 17:37

இந்த கே ஒய் சி என்பது இதற்கென்றே புரியவில்லை, அதிகாரிகளுக்கும் புரிகிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், இதனால் அவதிப்படுவது வாங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தான். எந்த அறிவிப்புமின்றி திடீரென்று ஆன்லைன் பரிவர்த்தனை நிறுத்தப்படுகிறது. கேட்டால் கே ஒய் சி தகவல் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தேசீயமாக்கப்பட்ட குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளில் மெத்தனம் முதலியவை காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை திருப்திகரமாக இல்லை. இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செம்மைப்படுத்தவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை