வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மூன்றாவது பொருளாதார நாட்டின் சாதனை,,,,
அங்கே வரலாறு காணாத ஏற்றுமதி. இங்கே வரலாறு காணாத ரூவாய் மதிப்பு.
அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 51 பைசா குறைந்து, 88.09 ரூபாய் என்ற வரலாறு காணாத சரிவைக் கண்டது. ரூபாய் மதிப்பு, 88ஐ கடப்பது இதுவே முதல்முறை. இந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை இந்த சரிவுக்கு வழிவகுத்தன. மாத இறுதியை முன்னிட்டு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பேமென்ட்களை செலுத்த வேண்டும் என்பதால், டாலர் தேவை அதிகரித்ததும் சரிவுக்கு ஒரு காரணமாகும். நேற்றைய வர்த்தக நேரத்துக்கு இடையே, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.33 வரை சென்றது. இந்நிலையில், ரூபாயை சரிவிலிருந்து மீட்க, ரிசர்வ் வங்கி, டாலர் விற்பனையில் இறங்கக்கூடும் என கரன்சி சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மூன்றாவது பொருளாதார நாட்டின் சாதனை,,,,
அங்கே வரலாறு காணாத ஏற்றுமதி. இங்கே வரலாறு காணாத ரூவாய் மதிப்பு.