வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Since,the computation rate of CGST and SGST are same, how the above value are different?.is it correct?
புதுடில்லி : கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் 9.10 சதவீதம் அதிகரித்து 1.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., வசூல் கடந்தாண்டு செப்டம்பரில் 1.73 லட்சம் கோடி ரூபாயாகவும்; கடந்த ஆகஸ்டில் 1.86 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூலில் உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து 1.36 லட்சம் கோடி ரூபாயும்; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து 52,492 கோடி ரூபாயும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ரீபண்டுகள் 40.10 சதவீதம் அதிகரித்து 28,657 கோடி ரூபாயாக இருந்தது. நிகர ஜி.எஸ்.டி., வசூல் ஐந்து சதவீதம் அதிகரித்து 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதம் வரி வசூல் நான்கு சதவீதம் அதிகரித்து 11,413 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி முதல், ஜி.எஸ்.டி., குறைப்பு அமலுக்கு வந்த பிறகு, ஒரு வார ஜி.எஸ்.டி., வசூலும் இதில் அடங்கும்.
Since,the computation rate of CGST and SGST are same, how the above value are different?.is it correct?