தங்க நகை கடன் வழங்குவதில் சிறுநிதி வங்கிகள் அதிக ஆர்வம்
புதுடில்லி : வங்கிகளின் கடன் வர்த்தகம் மந்தகதியில் உள்ள நிலையில், தங்க கடன் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கடன் வணிகத்தை பெருக்க சிறுநிதி வங்கிகள் திட்டமிட்டுள்ளன. தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அதன் மீது கடன் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் நீடிக்கும் நிலையில், கடன் வணிகத்தில் தங்க கடன் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதை பயன்படுத்தி, வட்டி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, தங்க கடன் பெறுவோரை கவர்வதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு போட்டி ஏற்படுத்த ஸ்மால் பைனான்ஸ் பேங்க் எனப்படும் சிறுநிதி வங்கிகளும் ஆர்வம் கொண்டுள்ளன. தங்க கடன் வழங்குவது பாதுகாப்பான கடன் பிரிவில் வருவதால், தனிநபர் உள்ளிட்ட சில பாதுகாப்பற்ற கடன்களை வழங்குவதைவிட, இதில் வங்கிகள் பெரிதும் அக்கறை காட்டுகின்றன. இதற்காக, தங்க கடன் பிரிவில் ஊழியர்கள் எண்ணிக்கையை ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் அதிகரித்து வருகின்றன. தங்க கடன் வழங்கும் வசதி இல்லாத கிளைகளிலும், அந்த வசதியை துவங்குவதில் தீவிரம் காட்டுகின்றன. ஆர்.பி.ஐ., தரவின்படி, ஆகஸ்டில் தங்க கடன் 117% உயர்வு 2024 ஆகஸ்ட் மாதத்தைவிட தங்க கடன் வணிகம் 40% அதிகம்