| ADDED : பிப் 01, 2024 12:12 AM
புதுடில்லி: கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் நிதி பற்றாக்குறை, பட்ஜெட் இலக்கில் 55 சதவீதத்தை எட்டியதாக, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.90 சதவீதம், அதாவது 17.86 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுஉள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் இறுதியில், நிதி பற்றாக்குறை 9.82 லட்சம் கோடி ரூபாயை எட்டிஉள்ளது.அதேபோல, கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், நிகர வரி வருவாய் 17.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட் இலக்கில், 74.20 சதவீதம்ஆகும்.கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் 30.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட் இலக்கில், 67.80 சதவீதமாகும். நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் விதமாக விதமாக, வரும் நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.50 சதவீதத்துக்கும் கீழே கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.