1: கேள்வி – பதில்
கேள்வி: சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் ஜவுளி எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்று, வெளிநாட்டு வாங்குபவர்களை நேரடியாக அணுக அரசு எவ்வாறு உதவலாம்? பதில்: சிறு ஜவுளி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பதில் செலவு அதிகரிக்கும். அங்கு சென்றாலும் உடனே ஆர்டர் கிடைப்பது சுலபமில்லை. அதனால், அரசு முக்கிய கண்காட்சிகளில் சிறு நிறுவனங்களுக்கு இடம் ஏற்பாடு செய்து, செலவிலும் உதவி செய்ய வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்து, எந்த நாட்டில் எந்த ஜவுளி பொருளுக்கு தேவை இருக்கிறது என்ற தகவலும் கொடுத்தால் பயன் இருக்கும். இப்படியான உதவி கிடைத்தால், சிறு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஆர்டர்கள் பெற வாய்ப்பு அதிகரிக்கும். ஓம் பிரகாஷ் குப்தா பொதுச் செயலர், லகு உத்யோக் பாரதி