உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / லித்தியம் அயான் பேட்டரி தயாரிக்கும் அமர ராஜா

லித்தியம் அயான் பேட்டரி தயாரிக்கும் அமர ராஜா

புதுடில்லி : பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமர ராஜா நிறுவனம், 'ஜி.ஐ.பி., எனர்ஜி எக்ஸ்' நிறுவனத்துடன், லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பேட்டரி உற்பத்திக்கான சந்தையில் 35 சதவீத பங்கை அமர ராஜா நிறுவனம் கொண்டுள்ளது-. இந்நிறுவனம், ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமும், ஸ்லோவாக்கியாவின் கோஷன் ஹை டெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜி.ஐ.பி., எனர்ஜி எக்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வளர்ந்து வரும் மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயான் பேட்டரிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை, அமர ராஜா நிறுவனத்துக்கு ஜி.ஐ.பி., எனர்ஜி எக்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை